திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2023 (08:12 IST)

முதலமைச்சரின் சித்தப்பா கைது: கொலை வழக்கில் சி.பி.ஐ. அதிரடி

cbi6
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியின் தம்பி மகன் விவேகானந்த ரெட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடப்பா மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது கொடூரமாக குத்தி செல்லப்பட்டார்
 
இந்த படுகொலை ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படுகொலையில் விவேகானந்தர் ரெட்டியின் மற்றொரு சகோதரரான ஒய்.எஸ் பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது மகனுக்கு தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் ஓஎஸ் பாஸ்கர் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதே வழக்கில் பாஸ்கர் ரெட்டியின் மகனும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
முதலமைச்சரின் சித்தப்பா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva