1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (08:14 IST)

பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டருக்கு தொகுதி ஒதுக்கிய காங்கிரஸ்..!

பாஜகவில் எம்எல்ஏவாக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அவருக்கு ஹூப்லி என்ற தொகுதியை ஒதுக்கியுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 
 
இந்த நிலையில் பாஜகவின் முக்கிய பிரமுகராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனவே அவர் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஸ் ஷெட்டருக்கு ஹூப்ளி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் மகேஷ் தென்கினகாய் போட்டியிடப் போகிறார். பாஜகவில்  இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தொகுதியில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva