1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (11:49 IST)

மோடியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த டிரம்ப் மகள்!

பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 
 
கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியாவுக்கு வந்தார் ஐதராபாத்தில் நடைபெற்ற உலக தொழில் முனைவோர் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். இதே மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது எடுத்த புகைப்படங்களை மூன்று வருடம் கழித்து தற்போது தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
இந்த புகைப்படங்கள் அமெரிக்கா இந்தியா இடையே வலுவான நட்புறவு நிலவ வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில் தனது தந்தை அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து வெளியேற உள்ள நிலையில்  இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன