புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (09:32 IST)

கஜா புயலால் ராக்கெட் ஏவும் நேரம் மாற்றமா? இஸ்ரோ தகவல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 14 அல்லது 15ஆம் தேதி சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகள் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய்ம் முதலில் கூறியது. ஆனால் தற்போது சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 14ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு  ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு அதன் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கஜா புயல் காரணமாக ராக்கெட் ஏவப்படாது என்று செய்திகள் வெளிவந்தது.

ஆனால் இந்த தகவலை இஸ்ரோ மறுத்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜிஎஸ்எல்வி மாக் 3 வரும் 14ம் தேதி மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்றும், இந்த ராக்கெட் புயல் காரணமாக ஏவப்படாது என செய்தியில் உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

3,423 கிலோ எடை கொண்ட மாக்-3 ராக்கெட் தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ எடுத்துச்செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது