செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 செப்டம்பர் 2018 (07:59 IST)

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகரும் பலகுரல் கலைஞருமான ராக்கெட் ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 74. மறைந்த ராக்கெட் ராமநாதன் அவர்களுக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்பாலா என்ற மகளும், சாய்குரு பாலாஜி என்ற மகளும் உள்ளனர்.

இயக்குனர் ஆர்.சி.சக்தியின் உறவினராக ராக்கெட் ராமநாதன், 'ஸ்பரிசம்' ஒருபுல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது,  வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம் உட்பட பல தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்பட ஒருசில விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த நகைச்சுவை கலைஞருக்கு ஏராளமான திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராயப்பேட்டை காவல்நிலையம் அருகே உள்ள இவரது இல்லத்திற்கு பலர் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.