1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 மார்ச் 2025 (09:44 IST)

குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் எப்போது செயல்படும்? இஸ்ரோ தலைவர் தகவல்

ISRO
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கனவே இரண்டு ஏவுதளங்கள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த ஏவுதளம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எல்.ஏவுவதற்கான ஏவுதளம் கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வருகிறது. குலசேகரப்பட்டினத்தில் இரண்டு ஏவுதளங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த ஏவுதளங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிக்கும் என்றும், திறன்களை மேம்படுத்த இந்த புதிய ஏவுதளங்கள் உதவும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டு ஏவுதளங்கள் தற்போது 30 டன் எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவும் தரம் கொண்ட நிலையில், அங்கு மூன்றாவது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

Edited by Siva