ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (19:15 IST)

கொரோனாவின் கதை முடிந்ததா??

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனாவுக்கு டெல்டா, காப்பா என கிரேக்க எழுத்துகளை உலக சுகாதார அமைப்பு( who) புதிய பெயர்களை அறிவித்தது.

இங்கிலாந்து நாட்டில்  கொரோனா 3 வது அலைப்பரவல் உருவாகியுள்ளதாக இந்தியவைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் எச்சரித்துள்ளார். அங்கு உருவாகியுள்ள கொரொனாவுக்கு ஆல்பா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு பீட்டா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளாது. அதேபோல் பிரேசிலில் காமா எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

கொரொனா தொற்று உலகில் பரவி இதுவரை 1 ½ ஆண்டுகள் ஆகிறது. இந்த வருட ஆரம்பத்தில் குறைவதுபோல் இருந்த கொரொனா திடீரென்று வேகமெடுத்துப் பரவியது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மனிதர்களால் இத்தொற்றுப் பரவிவருவதால் அரசு கூறும் அறிவுரைக்ள் மற்றும் ஊரடங்கும் சமூக விலகம் தன் சுத்தம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால்  இத்தொற்றின் கதை முடியலாம். அதற்க் மக்கள் ஒத்துழைப்பு தருவது இன்றியமையாதது ஆகும்.