புகை பிடிப்போருக்கு கொரோனா பாதித்தால் மரண வாய்ப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தற்போது தடுப்பூசிகள் உலகம் முழுவதும் போடப்பட்டு வருவதால் படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை உள்ளிட்ட நோய்களும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மரணம் அடையும் ஆபத்து அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் உடலின் உள்ளே சென்றதும் நுரையீரலை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் என்பதால் அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தால் மரணமடையும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது
எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது நல்லது என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு புகைப்பவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் புகைப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது