1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (13:30 IST)

கலவரக்காரர்களுக்கு மாநில அரசே துணை நிற்கிறதா? பாஜக கேள்வி

நேற்று மேற்கு வங்கத்தில் உள்ள துர்க்கை கோவில் கலகக் காரர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் பாஜக தலைமையிலான  ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், எதிர்க்கட்சி  தலைவர்கள்  உள்ளிட்ட பலரும்  போராடி வருகின்றனர்.
 
இப்போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  மத்திய அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
 
தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரும் 23 ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில்  துர்க்கை கோவில் கலகக் காரர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது :
 
மேற்கு வங்கத்தில் இருக்கும் துர்க்கை கோவில் நேற்று கலவரக்காரர்களால் சேதப் படுத்தப்பட்டது. கலவரக்காரர்களுக்கு மாநில அரசே துணை நிற்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளது.