கடவுளா இது ? ’குரல் மூலம் பைக்கை இயக்கும் வித்தகர் ’ ; வைரல் வீடியோ
டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது குரல் வழி கட்டளை மூலமே பைக்கை இயக்குவது, அதற்கு ஸ்டாண்ட் போடுவது போன்ற அத்துனையும் செய்து ஆச்சர்யப்படுத்துகிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
சாதரணமாக நாம் ஏடிஎம்க்குள் சென்று ஸ்கிரீனில் வரும் உத்தரவுகளை கொண்டுதாம் பணம் எடுப்போம். ஆனால் இந்த இந்த தொழில் நுட்ப வல்லுநர் தனது குரல் கட்டளை மூலமே இருசக்கர வாகத்தை இயக்குகிறார். ஸ்டாண்ட் போடுகிறார். அதன் விளக்குகளை அணைக்கிறார். அதுமட்டுமா அந்த வாகனத்திலேயே சிறிய ரக ஏடிஎம் மெஷின் வைத்துள்ளார். அதில் இருந்து அவரது குரலின் உத்தரவுக்கு ஏற்ப பணம் வருகிறது.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது. குறிப்பாக இதில் இது என்ன டெக்னாலஜியோ கடவுளுக்குத் தான் தெரியும் என பதிவிட்டுள்ளனர்.