1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (23:21 IST)

இந்திய வீரர்கள் வீரமரணம் : என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை – ராகுல் இரங்கல்

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த பழனிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

நேற்று இரவு நடந்த திடீரென சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் சீன எல்லையில் நேற்று இரவு நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த மூவரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 


இந்திய ராணு வீரர்களின் வீரத் தியாகத்திற்கு பல தலைவர்கள் இரக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் கேரள வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கள் தெரிவித்துள்ளார்.

அதில், நம் நாட்டிற்காக  தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து வீர மரணம் அடைந்துள்ள ராணுவ அதிகாரி மற்றும் ராணுவ வீரர்களின் இழப்பின் வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை;  எனது ஆழ்ந்த இரங்களை அவர்களின் குடும்பத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்; நாங்கள் எல்லா கஷ்டமான் நேரங்களிலும் உங்களுக்குத் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.

பாஜக  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

சீனாவின் அடாவடித்தனம் அத்துமீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமரணம் அடைந்த இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு #வீரவணக்கம் செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.