திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (12:24 IST)

ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை: இந்திய ரயில்வே புதிய திட்டம்

railway
ரயில்வே துறையில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையை போக்க, ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க இருப்பதாக ரயில்வே புதிய திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்திய ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க மற்றும் ரயில் விபத்துகளை குறைக்க, நல்ல உடல் தகுதியுடன், ஓய்விற்கு முந்தைய ஐந்து ஆண்டுகள் பணியில் அனுபவம் பெற்ற, சான்று பெற்ற மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாத, 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களை ரயில் லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு பொறியாளர், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த திட்டத்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தை அமல்படுத்த கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. ரயில்வே துறையில் உள்ள காலி இடங்களை முறையாக தேர்வு செய்து, இளைஞர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவதால் சிக்கல்கள் தான் ஏற்படும் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Mahendran