வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (09:07 IST)

இனிமேல் எந்த வீடியோவும் போடமாட்டேன்… நல்ல வேலை கிடைத்துவிட்டது – மும்பையில் குடியேறும் பாடகி சுசித்ரா!

தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் பிரபலம் ஆனவர் சுசித்ரா. இவர் சினிமா தவிர ரேடியோ ஜாக்கி மற்றும் பத்திரிக்கைகளில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 1500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவர் சுச்சிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கி தற்போது பட வாய்ப்புகளை இழந்துள்ளார்.

அவரின் டிவிட்டர் கணக்கில் இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அந்த பதிவுகளை தான் பதிவிடவில்லை என்றும் தன்னுடைய அப்போதைய கணவர் கார்த்திக் குமார்தான் அவற்றை வெளியிட்டார் என்றும், அவருக்கு அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கொடுத்தது தனுஷ்தான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் சுசித்ராவுக்கு மனநல பாதிப்பு உள்ளதாக கார்த்திக் குமார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து பல நேர்காணல்கள் தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி விமர்சித்து பேசி சர்ச்சை நாயகியாக வலம் வந்தார் சுசித்ரா.

இந்நிலையில் மும்பையில் இருந்து 80 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவரும் குழந்தைகள் பத்திரிக்கை ஒன்றில் தனக்கு வேலை கிடைத்து விட்டதாகவும் அதனால் இனிமேல் எந்த வீடியோவும் வெளியிட மாட்டேன் என்றும் சுசித்ரா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தான் பேசியவை அனைத்தும் உண்மைதான் என்றும் பழைய வீடியோக்களை எல்லாம் நீக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.