புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (12:41 IST)

“நான் சினிமாவில்தான் இருக்கிறேன்… வேறு எந்த வேலையும் தெரியாது” –சரண்யா பாக்யராஜ் பதில்!

பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அவரது மகள் சரண்யா பாக்யராஜ். அதன் பிறகு ஏனோ அவர் சினிமாவில் நடிக்கவில்லை. இத்தனைக்கும் அந்த படத்தில் அவர் நடிப்பு நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இடையில் அவர் அமெரிக்கா படிக்க சென்ற போது ஒருவரை காதலித்ததாகவும் ஆனால் அந்த காதல் கைகூடாததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் வீட்டை விட்டே வெளியே வராமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இப்போது அவர் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தான் சினிமாவில்தான் தொடர்ந்து இருப்பதாகவும் திரைக்குப் பின்னால் வேலை செய்துகொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் சினிமாவை விட்டால் தனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது எனவும் கூறியுள்ளார். அவர் காஸ்ட்யூம் டிசைனராக வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.