1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (17:19 IST)

தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு அறுசுவை உணவு பரிமாறிய - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்....

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி  சாலையில் நடைபெற உள்ளது. 
 
இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநில நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் சேலம் அருகே நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் செய்திருந்தார். பிற்பகல் வரை சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றி முடித்தனர் இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
 
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என் ஆனந்த் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் அறுசுவை உணவு  பரிமாறினார்கள்.
 
தலைவாழை இலை போட்டு வடை, பாயாசத்துடன் அனைத்து நிர்வாகிகளுக்கும் புஸ்ஸி ஆனந்த் அவர்களே பரிமாறியது நிர்வாகிகளிடையே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.