திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (13:32 IST)

அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கங்கை நதிக்கு தெற்கே உள்ள மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், பீகார் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என்றும் சிக்கிம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆந்திராவின் ஒரு சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
 
நாட்டில் உள்ள 36 வானிலை ஆய்வு மையங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் இன்னும் அதிகம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதிகரிக்கும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் வயதானவர்கள் நோயாளிகளை இந்த வெப்பம் அலையில் இருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிக அளவு தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் அருந்த வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது 
 
Edited by Mahendran