புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 27 மே 2021 (11:36 IST)

பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ?

யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல்.

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ சங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அளிக்க வேண்டிய மருந்துகள் குறித்து தகவல்களை பகிர்வதுடன், ஆதாரமற்ற போலி மருத்துவங்கள் குறித்தும் விளக்கம் அளித்து வருகிறது.
 
இந்நிலையில் நவீன மருத்துவம் குறித்து சமீபத்தில் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் நவீன மருத்துவத்தால் குணப்படுத்த இயலாத நோய்கள் என சிலவற்றை குறித்தும் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள இந்திய மருத்துவ சங்கம், நவீன மருத்துவத்தை அவதூறாக பேசியதற்காக 15 நாட்களுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.1000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த சங்கம் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தங்கள் நிறுவனத்தின் பொருள்களை விளம்பரப்படுத்துவதற்காக கொரோனா பாதிப்புக்கான இந்திய அரசின் சிகிச்சை நடைமுறைகளுக்கு சவால் விடும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகள் தெளிவான தேசத் துரோக குற்றம் என்பது எங்களுடைய கருத்து. இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக தேசத் துரோக குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று ஐஎம்ஏ வலியுறுத்தியுள்ளது.