1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (13:32 IST)

இந்திய செஸ் வீரர் குகேஷ் சாதனை..! பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!!

Gukesh
கேண்டிடேட்ஸ் தொடரில் சாதனை படைத்துள்ள இந்திய செஸ் விளையாட்டு வீரர்  குகேஷுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது  பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
 
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான  குகேஷ் அபார வெற்றி பெற்றார். மொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ள அவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் அவர் எட்டியுள்ளார்.
 
PM Modi
பிரதமர் மோடி வாழ்த்து:
 
இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,  இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்ற குகேஷின் சாதனையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
குகேஷின் குறிப்பிடத்தக்க சாதனை அவரது அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்றும் அவரது சிறந்த செயல்திறன் மற்றும் உச்சத்திற்கான பயணம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது என்றும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
 
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:
 
தமிழக முதல்வர் ஸ்டாலின் குகேஷுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வியத்தகு சாதனையைப் புரிந்துள்ள குகேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார். 
 
வெறும் 17 வயதில், கேண்டிடேட்ஸ் தொடரின் மிக இளவயது 'சேலஞ்சர்'-ஆக வரலாறு படைத்துள்ளார் என்றும் பதின்பருவத்தில் இத்தகைய வெற்றி வெறும் முதல் வீரராகச் சாதித்துள்ளார் என்றும் அடுத்து, டிங் லிரன் உடனான உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றிவாகை சூடிட எனது வாழ்த்துகள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
udayanithi stalin
உதயநிதி வாழ்த்து:
 
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த குகேஷுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, SDAT இன் ELITE விளையாட்டு வீரர் மற்றும் கிராண்ட்மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்FIDE Candidates செஸ் போட்டி 2024 இன் சாம்பியனான குகேஷ் டி.17 வயதான சென்னையின் பெருமை இந்திய செஸ்ஸில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற இரண்டாவது இந்திய வீரர் குகேஷ் ஆவார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக டிங் லிரனுக்கு சவால் விடும் வகையில் அவர் தயாராகும் போது அவருக்கு நல்வாழ்த்துக்கள். குகேஷுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.