1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (14:01 IST)

அமேதி போலவே வயநாட்டிலும் காங்கிரஸ் இளவரசர் தோல்வி அடைவார்: பிரதமர் மோடி

Modi Ragul
அமேதி காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தது போல் வயநாட்டிலும் இந்த முறை தோல்வி அடைவார் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசிய போது கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வி அடைந்ததை போலவே காங்கிரஸ் இளவரசர் இந்த முறை மக்களவைத் தேர்தலில் வயநாட்டிலும் தோல்வி அடைவார்
 
ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு பின்னர் ராகுல் காந்தி வேறொரு பாதுகாப்பாக இடத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாததால் தான் இந்தியா கூட்டணியை சேர்ந்த சோனியா காந்தி மாநிலங்களவைக்கு போட்டியிட்டு உள்ளார் என்றும்  அவர் தெரிவித்தார் 
 
முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தீமைகளை சரி செய்ய எங்களுக்கு 10 வருடங்கள் ஆனது என்றும் நிறைய உழைப்பு தேவைப்பட்டது என்று கூறிய பிரதமர் மோடி, இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லை இந்தியா வளர்ச்சி பாதைக்கு செல்லும் அவர் கூறினார். இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் கட்டாயம் தோல்வியடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva