பாகிஸ்தானின் ட்ரோனை சுட்டு வீழ்திய இந்திய ராணுவம்!
இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அண்டை நாடான பாகிஸ்தானும், சீனாவும் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் சண்டையிடுவதும், தாக்குதல் நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் மா நிலம் டர்ன் தரன் என்ற மாவட்டதிதின் பெரோஸ்பூர் செக்டரில் உள்ள ஹர்பஜன் எல்லைச் சாவடி அருகில் நேற்றிரவு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆளில்லா விமானம் பறந்தது.
இதைப் பார்த்த, எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இன்று காலையில், அமிர்தரசில் உள்ள ஒரு விவசாய நிலப் பகுதியில் அந்த ஆளில்லா விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.