2047க்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் ! பிரதமர் மோடி உறுதி!
இதே நிலையில் நாடு தொடர்ந்து கொண்டிருந்தால் 2047ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் பாஜக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் அமைந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக 2019 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், நாட்டில் பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வரும் நிலையில், சமீபத்தில், மக்களுக்கு நலத்திட்டங்கள் தவிர இலவசத்திட்டங்கள் குறைய வேண்டும் எனக் கூறினார்.
இந்த நிலையில், குஜராத் மா நிலத்தில் தன் சொந்த மாவட்டமான கட்ஸ்யில், இன்று மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய மோடி, வரும் 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறியிருக்கும் என உறுதியளித்துள்ளார்.மேலும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு அவர் வாழ்த்துகளும் பாரட்டும் தெரிவித்தார்.