வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (09:34 IST)

இந்தியாவில் பாதிப்பு 75 ஆயிரத்தை தொடும்??: அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மே மாத இறுதிக்குள் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

டைம்ஸ் பத்திரிக்கை நிறுவனத்துடன், சர்வதேச ஆய்வு நிறுவனமான புரோடிவிட்டி இந்தியாவில் கொரோனா பரவுதல் குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா பரவியதன் சாத்தியங்களை கொண்டு மூன்று மாதிரி ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மே 22ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. கொரோனா குறைவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்த வகையில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் செப்டம்பர் 15ல் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியத்தை அடையும் என்றும், மே 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஜூன் இறுதியில் கொரோனா பரவல் பூஜ்ஜிய நிலையை அடையும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.