1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (09:03 IST)

அரைக்கம்பத்தில் தேசிய கொடி… எலிசபெத் மறைவிற்கு துக்கம்!

இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.


இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலக நாட்டு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

மகாராணியின் மறைவால் இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு பிறகு இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மகாராணி எலிசபெத் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

செப்டம்பர் 11 ஆம் தேதியன்று அரசு முறை துக்கம் அனுசரிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. செப்டம்பர் 11 ஆம் தேதி நாடு முழுவதும் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், அன்றைய நாள் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.