1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (17:10 IST)

புதிய கல்விக் கொள்கையால் உயர் கல்விக்கு நிறைய வாய்ப்பு - நிர்மலா சீதாராமன்

nirmalasitharaman
புதிய தேசியக் கல்விக் கொள்கை நிறைய வாய்ப்புகளை  உருவாக்கியுள்ளதாக த்திர்ய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்தது.

கடந்த 1986 ஆம் ஆண்டில் இருந்த கல்வி முறைக்கு மாற்றாக புதிய தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  நாடு முழுவதும் இது பேசு பொருளானது.

இந்த  நிலையில், புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்துள்ளதாக நிர்மலா சீமா ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உலகம் முன்னேறுவதையும், தொழில் நுட்பம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை பெற்றோர் அறிய வேண்டும். தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை பெற்றோர் ஒதுக்கிவைக்க வேண்டும்.  வரும் 2028 ஆம் ஆண்டில் சீனாவை இந்தியாவில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.