செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (06:40 IST)

கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா 2-வது இடம்: அதிர்ச்சி தகவல்

கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா 2-வது இடம்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா பிரேசிலை அடுத்து இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது என்ற அதிர்ச்சி செய்தி நேற்று வெளியான நிலையில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா 2-வது இடம் பெற்றுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது
 
நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 49,458 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22,510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அமெரிக்காவுக்கு அடுத்து ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, இந்தியாவை அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 21,486 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
கொரோனா பாதிப்பில் மட்டுமின்றி ஒரே நாள் கொரோனா மரணங்களிலும் இந்தியா 2-வது இடம் பெற்றுள்ளது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 656 பேர் கொரோனாவால் மரணம் அடைந்த நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 474 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஒரே நாளில் 360 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
உலகளாவிய கொரோனா மொத்த பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் ஒருநாள் பாதிப்பிலும் ஒருநாள் மரணத்திலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது