வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (09:33 IST)

கச்சா எண்ணெய் தடையால் பாதிப்பு வராது! – மத்திய அரசு விளக்கம்!

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவில் எந்த பாதிப்பும் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்யா மீது உலக நாடுகள் சர்வதேச பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் கிடுகிடுவென விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தபோது, சர்வதேச சந்தை நிலவரம் மோசமானாலும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு வராது. மக்களின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளது. தட்டுப்பாடு இருக்காது என்றாலும் விலையேற்றம் இருக்குமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.