இந்தியா- பாரத் விவகாரம்:படத்தின் டைட்டிலை மாற்றிய ரஜினி பட நடிகர்
சமீபத்தில் இந்தியாவில் பெயர் பாரத் என மாற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் இணையதளத்தில் பரவியது.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு கூறி வருகின்றனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான கட்சிகள் ஒன்றிணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளதால், பாஜகவினர் பாரத் என்று அழைப்பதாக தகவல் வெளியானது.
இன்றைய ஜி20 உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி மேசையின் மீது இருந்த தகவல் பலகையில் பாரத் என்று பெயரிடப்பட்டிருந்தது. சமீபத்தில், ஜி20 அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது.
இது இந்திய அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமாரின் 'மிஷன் ராணிகன்ஸ் தி கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ' என்ற படம் வரும் அக்டோபரில் ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில், இந்தியா -பாரத் விவாதம் நடைபெற்று வருவதால், தினு சுரேஷ் தேசாய் இயக்கத்தில், அக்ஷய்குமார் நடித்துள்ள படத்திற்கு மிஷன் ராணிகன்ஸ் தி கிரேட் பாரத் ரெஸ்கியூ என தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.