வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (09:00 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் கமல்ஹாசன்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ன் ப்ரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவின் மூலம் இந்த சீசனில் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் போட்டியாளர்களாக அப்பாஸ், பிருத்விராஜ், கிரண், வைரல் ஆன டிரைவர் ஷர்மிளா உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த சீசனுக்காக கமல்ஹாசனுக்கு 130 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீசனில் அவர் 12 முதல் 13 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார். அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.