செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (09:38 IST)

பிக்பாஸ் 7-ல் போட்டியாளராக கலந்துகொள்ளும் குக் வித் கோமாளி பிரபலம்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ன் ப்ரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவின் மூலம் இந்த சீசனில் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சீசன் 7 தொடங்க உள்ளது.

இந்த சீசனில் போட்டியாளர்களாக அப்பாஸ், பிருத்விராஜ், கிரண், வைரல் ஆன டிரைவர் ஷர்மிளா உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் பத்திரிக்கையாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் பயில்வான் ரங்கநாதன் கலந்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது மற்றொரு போட்டியாளராக குக் வித் கோமாளி பிரபலம் குரேஷியும் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.