ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (19:08 IST)

விநாயகர் சதுர்த்தியன்று கைலாசா பறறிய முக்கிய அறிவிப்பு !

சமீபத்தில், கைலாசாவில் கொரோனா இல்லை, எங்களை பரமசிவன் பாதுகாக்கிறார் என  நித்தியானந்தா தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா குறித்த முக்கிய அறிவிப்புகளை நித்தியானந்தா வெளியிடுகிறார் என தகவல்கள் வெளியாகிறது.
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
 
இந்நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா கொரோனா வைரஸ் குறித்து அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளமாக கருதப்படும் பிஎம்ஓ கைலாஸ் அக்கவுண்டில் ஒரு டிவிட் போடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
கொரோனா வைரஸால் நாங்கள் (கைலாஸ்) பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் எங்களைத் தாக்காது. எதிர்காலத்திலும் எங்களைத் தாக்காது. ஏனெனில் பரமசிவன் எங்களைப் பாதுகாத்து வருகிறார். காலபைரவரும் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாவலாக இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் வரும் விநாயகர்  சதுர்த்தியில் கைலாசா தீவு குறித்த முக்கிய தகவல்களை அவர் வெளியிடவுள்ளார் என தெரிவித்துள்ளார்.