புதிய சூரியன் உதயமாகிறது: தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் மீராமிதுன்
கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய டுவிட்டுகளையும் வீடியோக்களையும் பதிவு செய்து வரும் மீராமிதுனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா குறித்தும் அவர்களது மனைவிகள் குறித்தும் மீராமிதுன் தெரிவித்த கருத்துக்கள் இருதரப்பு நடிகர்களின் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. இந்த நிலையில் விஜய், சூர்யா ரசிகர்களுக்கு மீராமிதுன் பதிலடி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மீராமிதுன் சற்று முன் பதிவு செய்துள்ள ஒரு டுவிட்டில் தான் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். வரும் விநாயகர் சதுர்த்தியன்று புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள மீராமிதுன் ’புதிய சூரியன் உதயமாகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்
இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்க தனக்கு ஆதரவாக இருப்பவர்கள், பைனான்சியர்கள், அரசியல்வாதிகள் ஆகிய அனைவருக்கும் நன்றி என்று கூறிய மீராமிதுன் புதிய தயாரிப்பு நிறுவனம் டெல்லியில் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மீராமிதுன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் என்னென்ன படங்கள் தயாரிக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்