வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 17 மே 2023 (21:38 IST)

ஐ.ஜ.த கட்சி தலைவர் பிரியாணி விருந்து...100 க்கும் மேற்பட்ட நாய்களை காணவில்லை என பாஜக குற்றச்சாட்டு

பீகார் மாநில பிரபல அரசியல் கட்சித் தலைவர் தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த நிலையில், அங்கு 100 க்கும் மேற்பட்ட நாய்களை காணவில்லை என்று பாஜக தலைவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா  தள ஆட்சி நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக பஜாகவுடன் அக்கட்சி கூட்டணி அமைத்திருந்த   நிலையில் அவ்வப்போது, இருகட்சியினர் இடையே கருத்துவேறுபாடு எழுந்து வந்தது.

சமீபத்தில், ஐக்கிய ஜனதா தள கட்சி,  பாஜகவுடனாக கூட்டணியை முறித்துக் கொண்டது.

இந்த நிலையில், பீகார் மா நில ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக லல்லன் சிங் உள்ளார். அவர் தன் கட்சித் தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார். இது அம்மா நிலத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில், பாஜக தலைவர் விஜய்குமார்  சின்ஹா அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதில், நகரில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட நாய்களைக் காணவில்லை என மக்களிடமிருந்து எனக்குப் புகார் வந்துள்ளது. பிரியாணியில் இறைச்சி மற்றும் அரிசிக்கு பதிலாக நூற்றுக்கணக்கான விலங்குகளை கட்சித் தொண்டர்கள் சாப்பிட்டுள்ளனர். இது விசாரணைக்குரிய விவகாரம். இதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. அந்த விருந்தில் மதுபானம் பரிமாறப்பட்டதா எனத் தெரியவில்லை. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.