ஆதார் எண் இல்லை என்றால் இதை செய்தால் போதும்...
ஆதார் எண் இல்லாதவர்கள், அதனை பெறும் வரையில் மாற்று அடையாள அட்டைகள் மூலம் நலத்திட்ட உதவிகளைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் நாடு முழுவதும் 50 சதவீத மக்களே ஆதார் எண் பெற்றுள்ளர். இதனால், நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுவதாக பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதற்கு மறுப்பு தெரித்துள்ள மத்திய அரசு, ஆதார் அட்டை கட்டாயம் இருப்பினும் அது இல்லாதவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, போன்றவைகளை மாற்று அடையாள அட்டைகளாக சான்று அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆதார் எண் பெறும் வகையில், நலத்துறை முகாம்கள் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.