புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (15:16 IST)

ரெட் அலர்ட் எச்சரிக்கை: திறக்கப்படும் இடுக்கி அணை; பீதியில் மக்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நேற்று முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 
 
இந்த மழை ஐந்து நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 
 
தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள அதே நாளில் இருந்துதான் கேரளாவிற்கும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அங்கும் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து கேரள மாநில மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த ரெட் அலர்ட் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், கேரள அரசு சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த முறை போன்று வெள்ள பாதிப்பு ஏற்பட கூடாது என்ர காரணத்திற்காக 11 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 
 
பெரிய பாதிப்புகளை தடுக்க இடுக்கி அணை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.