Daily Horoscope
✕

ஒமிக்ரானை கண்டறிய புதிய டெஸ்டிங் கிட்! – ஐ.சி.எம்.ஆர் தகவல்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (13:49 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில் உடனடியாக ஒமிக்ரான் பரிசோதனை செய்ய விரைவில் கிட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 35 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரான் உறுதியாகியுள்ள நிலையில் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகளை அறிய காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க புதிய டெஸ்டிங் கிட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள ஐ.சி.எம்.ஆர் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிட் மூலம் இரண்டு மணி நேரத்திற்குள் ஒமிக்ரான் வைரஸை கண்டறிய முடியும் என கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

எதிரிகள் மாறுவார்கள்.. திமுக நிலைச்சி நிக்கும்!.. கே.என்.நேரு பேட்டி...

எதிலும் அமைச்சர்கள் தலையிடக்கூடாது!.. ஐயம் வாட்ச்சிங்!.. விஜய் வார்னிங்...

அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் அரசு வேலை கிடையாது: யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி....

முத்துக்குமாரை சிறையில் அடைக்க உத்தரவு - நீதிமன்றம் அதிரடி

முதல்வரை சந்தித்த பேராசிரியர் கலையரசன்.. இதை வைத்தும் அரசியல் செய்ய முடியாமல் போச்சே.. திமுக புலம்பல்...

அடுத்த கட்டுரையில்
Show comments