புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (16:00 IST)

’கோவிட் 19’ அறிகுறி : தனிமைக் காவலில் இருந்து தப்பிச் சென்ற IAS அதிகாரி !

தனிமைக் காவலில் இருந்து தப்பிச் சென்ற IAS அதிகாரி !

கேரள மாநிலத்தில்  கொரோனா தடுப்புக் காவலில் இருந்து வந்த உதவி கலெக்டர் யாருக்கும் தெரியாமல் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த சப் இன்ஸ்பெக்ட  மிஸ்ராவை  நோய்த் தடுப்புக் காவலில் தனிமையி ல் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் , அதிகாரிகளைக் கேட்காமல் மிஸ்ரா,  தனது சொந்த ஊரான  உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூருக்கு தப்பிச் சென்றுவிட்டது நேற்றிரவு தெரியவந்தது.

எனவே,  ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது குறித்து  கேரள அரசு , உத்தரபிரதேச மாநில அரசின் தலைமைச்செயலருக்கு மற்றும் மத்திய பணியாளர் நலத்துறைக்கு ஒரு தகவல் தெரிவித்துள்ளனர். உ.,பி சென்ற மிஸ்ரா மற்றும் அவரது  ஓட்டுநர் ஆகியோர் தனிமைக்  காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.