வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 27 மார்ச் 2020 (13:52 IST)

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு !

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு !

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று  இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களையும் நாட்டுப் பொருளாதாரத்தைக் காக்கும் வகையில் ரிசர்வ் வங்கி மற்றும் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. இதற்கு மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொருத்த வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. 

சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தினக்கூலிகளாக உள்ள மக்கள் மற்றும் அதிக அளவில் பணியில் ஈடுபடும் கட்டிய தொழிலாளர்கள், குழந்தைகள் போன்றவர்கள் உணவுக்கு கஷ்டப்படும்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்  சினிமா, சமூக ஆர்வலர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், செல்வந்தர்கள் தொடர்ந்து தங்கள் நிதி உதவி ,நிவாரணம் மற்றும் சமையல் பொருட்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றனர்.
நேற்று நிர்மலா சீதாராமன் பல அதிரடியாக திட்டங்களை அறிவித்தார். அதனால் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்தில் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்க்கட்சிகள் முதற்கொண்டு அனைவரும் மத்திய அரசை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இனிவரும் மூன்று மாதத்திற்கு வங்கிகளில் தவணை கட்ட வேண்டாம் என கூறி மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து, பாரத பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுக்காக  ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நடுத்தர வர்க்க மக்கள் , தொழில் நிறுவனங்களுக்கு உதவும் எனவும், இந்திய பொருளாதாரத்தை பாதுக்காப்பதற்காக நல்ல நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ் வங்கிக்கு பாட்டுகள் என தெரிவித்துள்ளார்.
மேலும் , இந்த அறிவிப்பு பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன் நிதி செலவைக் குறைக்கும் என தனது டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.