1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (08:24 IST)

I.N.D.I.A கூட்டணியின் 4வது கூட்டம் எங்கே? எப்போது? கசிந்த தகவல்..!

I.N.D.I.A கூட்டணியின் மூன்று கூட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது கூட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
பிரதமர் மோடியையும் பாஜகவையும் தோற்கடிப்பதற்காக இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது 
 
இதில் தற்போது 28 கட்சிகள் இருக்கும் நிலையில் இன்னும் சில கட்சிகள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூரிலும் மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடந்த நிலையில் தற்போது நான்காவது கூட்டத்தை  மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அடுத்த மாதம் இந்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 
 
இதற்கான தேதிகள் பரிசீலனைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva