1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (15:38 IST)

ஒரே நாடு, ஒரே தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நாளை அவசர ஆலோசனை

Mallikarjun Kharge
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நாளை அவசர ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நாளை இரவு 8 மணிக்கு அவசர ஆலோசனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.,க்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran