9 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத பிரதமர் மோடி
கடந்த 2014 ஆம் ஆண்டில் பிரதமராக மோடி பதவியேற்றது முதல் 9 ஆண்டுகளாகவே அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என RTI கேள்விக்கு பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக மோடி பதவியேற்றார்.
இந்த நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட கட்சி நிர்வாகிகளை ஆயத்தப்படுத்தி வருகின்றனர். தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் பிரதமராக மோடி பதவியேற்றது முதல் 9 ஆண்டுகளாகவே அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என RTI கேள்விக்கு பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.