திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (13:11 IST)

நாய் குரைச்சுட்டே இருக்கு, தூங்க முடியல: லாலுபிரசாத் குமுறல்

இரவு நேரங்களில் ஓயாமல் தெருநாய்கள் குரைத்து கொண்டிருப்பதால் தன்னால் தூங்க முடியவில்லை என்று ஊழல் புகாரில் சிக்கிய லாலுபிரசாத் கூறி இருக்கிறார்.
முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜார்கண்ட் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ராஜேந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் லாலு பிரசாத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான போலா யாதவ், லாலு பிரசாத்தின் அறைக்கு அருகே இரவு நேரங்களில் தொடர்ந்து தெரு நாய்கள் குரைப்பதால் அவரால் ஒழுங்காக தூங்க முடிவதில்லை, அதேபோல் அவரின் அறை கழிவறையும் மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே அவருக்கு வேறு அறை ஒதுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளார்.
 
அவரின் அறை மாற்றம் குறித்து சிறை நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.