ஆம்லேட் விலை 60 ரூபாயா? தட்டி கேட்ட இளைஞர் அடித்து கொலை!
ஹைதராபாத்தில் மதுபான பார் ஒன்றில் ஆம்லேட் விலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் லாங்கர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் விகாஸ். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் சமீபத்தில் தனது நண்பர் ஒருவருடன் அருகே உள்ள தனியார் மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். தனி அறையில் மது அருந்திய அவர்கள் சைட் டிஷ்ஷாக ஆம்லேட் ஒன்று ஆர்டர் செய்துள்ளார்கள்.
இந்நிலையில் ஆம்லேட்டுக்கு ரூ.60 மதுபான பாரில் பில் போட்டதால் விகாஸ் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு கை கலப்பாக மாற ஊழியர்கள் தாக்கியதில் விகாஸ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.