தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 23 பேர் பலி!? – துணை சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களில் 23 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் கொரோனாவால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் அவசரகால தடுப்பூசியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி இதுவரை 60 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலையில் அதில் 23 பேர் உயிரிழந்திருப்பதாக துணை சுகாதாரத்துறை செயளாலர் மனோகர் அக்னானி தெரிவித்துள்ளார். மேலும் அந்த 23 பேரும் தடுப்பூசி செலுத்தியதால் இறக்கவில்லை என்றும், வேறு பல காரணங்களால் இற்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.