செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (16:14 IST)

முதலிரவு வீடியோவை வலைதளத்தில் பதிவிட்ட கணவர்! ஷாக் ஆன மனைவி!

மத்திய பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் முதலிரவு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மச்லி மண்டி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த இளைஞர் தனது மனைவியிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு பிரச்சினை செய்து வந்துள்ளார்.

அடிக்கடி மனைவியை அவர் அடிப்பதும், துன்புறுத்துவதாகவும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் தனது தாயார் வீட்டிற்கே சென்ற இளம்பெண் தனது கணவர் மீது வரதட்சணை புகாரை அளித்துள்ளார். இந்நிலையில் புகாரை திரும்ப பெறுமாறு மிரட்டிய அவரது கணவர் மிரட்டியுள்ளார்.

ஆனால் அதை இளம்பெண் செய்யாததால் ஆத்திரமடைந்த அவர் இருவரும் உறவு கொள்ளும் முதலிரவு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் கணவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் தனது மனைவியுடன் அவர் செய்யும் சகலத்தையும் திருமணமானது முதலாகவே அவர் வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K