1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (12:55 IST)

எந்த Age Group நபர்களை கொரோனா வைரஸ் எளிதாக தாக்கும்??

கொரோனா வைரஸால் எந்த வயதுக்கு உட்பட்டோர் எளிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விவரம் ஒன்று வெளியாகியுள்ளது. 
 
கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. 147 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில், கொரோனா வைரஸால் எந்த வயதுக்கு உட்பட்டோர் எளிதாக பாதிக்கப்பட்டு மரணித்துள்ளனர் என புள்ளி விவரம் ஒன்று வெளியாகியுள்ளது. இது பின்வருமாறு... 
 
1. 9 வயது வரை உள்ள குழந்தைகள் 0.1%,
2. 10 - 19 வயது வரை உள்ளவர்கள் 0.2%,
3. 20 - 29 வயது வரை உள்ளவர்கள் 0.9 %,
4. 30 - 39 வயது வரை உள்ளவர்கள் 0.18%, 
5. 40 - 49 வயது வரை உள்ளவர்கள் 0.40 %,
6. 50 - 59 வயது வரை உள்ளவர்கள் 1.3 %, 
7. 60 - 69 வயது வரை உள்ளவர்கள் 4.6%, 
8.  70 - 79 வயது வரை உள்ளவர்கள் 9.8%, 
9. 80 வயதிற்கு மேற்பட்டோர் 18% 
 
இந்த புள்ளி விவரத்தின் மூலம் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு மரணித்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது. எனவே அவர்களிடம் இருந்து பரவாமல் காத்துக்கொள்ளும் படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.