பெண்ணை கற்பழித்து கொலை செய்த இளைஞரின் வீடு இடிப்பு.. அரசின் அதிரடி நடவடிக்கை..!
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் சிக்கந்தர் என்பவருக்கும் சமூக வலைதள மூலம் நட்பு ஏற்பட்டு அதன் பின்னர் காதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த பெண்ணை தனிமையில் வரச் சொன்ன சிக்கந்தர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கல்லை தலையில் போட்டு கொலை செய்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரது வீடு அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அடுத்த சில மணி நேரத்தில் அந்த வீட்டை அரசு அதிகாரிகள் இடித்து தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva