புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (00:20 IST)

விவசாயிகளுக்கு ஓராண்டுகளாக இலவச உணவு வழங்கிய ஓட்டல்

டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஓராண்டுகளாக உணவு வாங்கிய ஹோட்டல் உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகிறது.
 
பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக அரசு வேளாண் சட்டத்தை அறிமுகம் செய்தது. 
 
 பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடினர். ஓராண்டாக  நடந்த இந்தப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று கடிதம் எழுதிய நிலையில்  டெல்லியில் போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.  விவசாயிகள் அவரவர் மாநிலங்களுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில், ஓராண்டுகளாக போராடி வந்த விவசாயிகளுக்கு இலவச உணவு கொடுத்து வந்த டெல்லியில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளர்  கடைசி விவசாயி இங்கிருந்து போகும் வரை அவர்களுக்கு இலவச உணவு அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.