திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (21:07 IST)

டெல்லியில் போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு

மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று கடிதம் எழுதிய நிலையில்  டெல்லியில் போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். 
 
பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக அரசு வேளாண் சட்டத்தை அறிமுகம் செய்தது. 
 
இதற்கு எதிராக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடினர். ஓராண்டாக  நடந்த இந்தப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று கடிதம் எழுதிய நிலையில்  டெல்லியில் போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். நாளை விவசாயிகள் அவரவர் மாநிலங்களுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.