செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (20:55 IST)

பாபா ராம்தேவ் விபத்தில் மரணமா? வாட்ஸ் அப் வதந்தியால் பரபரப்பு

இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் யோகா பயிற்சி முகாம்களை நடத்தி பிரபலமானவர் பாபா ராம்தேவ். பிரதமர் மோடிக்கே நெருக்கமானவர் என்று கூறப்படும் பாபா ராம்தேவ் இன்று விபத்து ஒன்றில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் புகைப்படத்துடன் கூடிய ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.



 


பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள், பக்தர்கள், உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் இருக்கும் நிலையில் அவர்கள் இந்த செய்தி உண்மையா? என்று சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியுடன் கேள்வி கேட்டு வருகின்ரனர். ஆனால் இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது என்றும் பாபாவுக்கு எந்த விபத்தும் நேரவில்லை என்றும், வாட்ஸ் அப்பில் பரவி வரும் புகைப்படம் போலியானது என்றும் பாபா தரப்பில் விளக்கம் அளிக்கபப்ட்டுள்ளது.

யோகா, ஆன்மீகம் மட்டுமின்றி, பதஞ்சலி என்ற பெயரில் பல இயற்கையான மூலிகை தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் நிறுவனம் ஒன்றையும் பாபா ராம்தேவ் நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.