1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 மே 2022 (19:48 IST)

சென்னையை அடுத்த முக்கிய நகரத்திலும் பைக்கில் இருவருக்கு ஹெல்மெட் கட்டாயம்!

helmat
சாலை விபத்து, உயிரிழப்புகளை தடுக்க மத்திய மாநில அரசுகள்  நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சென்னையை தொடர்ந்து மும்பையில் பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என போலீஸ் உத்தரபு பிறப்பித்துள்ளனர்.

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் மரணம் தொடர்பாக போக்குவரத்துப் போலீஸார் ஒரு ஆய்வு நடத்தினர்.

அதில், குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் தலையில் அடிபட்டு  உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில்,சமீபத்தில் சென்னையில் பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது  கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதேபோல், மகாராஷ்டிர மா நிலம் மும்பையில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும்  ஹெல்மெட் அணிவது கட்டாயம் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.  அடுத்த 15 நாட்களில் இந்த உத்தரவு அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.